அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆ டவர்இவர் களுக்குள் தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ
அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் றம்பலத் தமுதனே எனநான் உன்னையே கருதி உன்பணி புரிந்திங் குலகிலே கருணைஎன் பதுதான் என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி இருக்கின்றேன் என்உள மெலிவும் மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்