அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ அறிவிலே அறிவறி வென்கோ இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ என்னுயிர்த் துணைப்பதி என்கோ வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ மன்னும்அம் பலத்தர சென்கோ என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி என்னைஆண் டருளிய நினையே