அன்புடை மகனே மெய்யருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே இன்புடை உரிமை மணம்புரி விப்பாம் இரண்டரைக் கடிகையில் விரைந்தே துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மைசேர் நன்மணக் கோலம் பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார் பொதுநடம் புரிகின்றார் தாமே
அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன் வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன் இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே