அம்பலத் தாடு மருந்து - பர மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து எம்பல மாகு மருந்து - வேளூர் என்னுந் தலத்தி லிருக்கு மருந்து நல்ல
அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே
அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே