அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன் அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும் மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும் வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- சௌந்தர மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்