அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் பெரிய பெருமாள் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே கரிய பெருமால் உடையற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே