அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே
அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப் பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே