அரும்பெறல் மணியை அமுதினை அன்பர் அன்பினுக் கெளிவரும் அரசை விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும் விளக்கினை அளக்கரும் பொருளைக் கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை முனிந்திடா தருள்அருட் கடலைத் தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே