அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே எனக்கும் உனக்கும்
அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன் மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால் இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே