அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி அப்பாநான் சிறியேன் எனினும் நினைஅன்றித் தெறியேன் மற்றோர் தேவர்தமை வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய் வேன்அடியேன் நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே
அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக் குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும் பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே