அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன் அச்சமும் அவலமும் உடையேன் செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது திருவுளத் தெனைநினை யாயேல் எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என்செய்வேன் யார்துணை என்பேன் பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என் பிழைபொறுத் தருள்வதுன் கடனே