அற்புத மான அழகனடி - துதி அன்பர்க் கருள்செய் குழகனடி
அற்புத நிறைவே சற்புதர் அறிவில் அறிவென அறிகின்ற அறிவே சொற்புனை மாயைக் கற்பனை கடந்த துரியநல் நிலத்திலே துலங்கும் சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச் செல்வமே சித்தெலாம் புரியும் பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே பொதுநடம் புரிகின்ற பொருளே () சற்புதர் - நல்லறிவுடையவர்
அற்புத ஸோதி மருந்து - எல்லாம் ஆகியன் றாகி அமர்ந்த மருந்து தற்பதம் தந்த மருந்து - எங்கும் தானேதா னாகித் தனித்த மருந்து ஞான