அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும் அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும் காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே