அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த் தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் ஒல்லை இங்குவா என்றருள் புரியா தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ புல்லர் மேவிடா ஒற்றிஅம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே
அல்லல் என்பதேன் தொல்லை நெஞ்சமே மல்லல் ஒற்றியூர் எல்லை சென்றுமே
அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய அம்பல வாணரே வாரீர் செம்பொரு ளாயினீர் வாரீர் வாரீர்