அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும் அருட்பெருஞ் சோதியை உலகக் களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும் காட்சியைக் கருணையங் கடலை உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியைக் குளவயின் நிறைந்த குருசிவ பதியைக் கோயிலில் கண்டுகொண் டேனே