அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும் அன்பர் தம்புடை அணுகிய அருள்போல் எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும் எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல் களிய மாமயல் காடற எறிந்தாங் கார வேரினைக் களைந்துமெய்ப் போத ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகுடை யோனே