அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும் தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான் எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே