ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன்முன் ஆகிய ஐவரை அளித்து நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த நித்த நீஎனும் நிச்சயம் அதனைத் தாக்க எண்ணியே தாமதப் பாவி தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே