ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும் அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப் பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக் காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே