ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும் மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக் காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர் சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே