ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக் காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப் போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்