பாடல் எண் :3128
ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
பண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே
பாடல் எண் :4183
ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே