ஆரண முடிமேல் அமர்பிர மத்தை ஆகம முடிஅமர் பரத்தைக் காரண வரத்தைக் காரிய தரத்தைக் காரிய காரணக் கருவைத் தாரண நிலையைத் தத்துவ பதியைச் சத்திய நித்திய தலத்தைப் பூரண சுகத்தைப் பூரண சிவமாம் பொருளினைக் கண்டுகொண் டேனே
ஆரண வீதிக் கடையும் - சுத்த ஆகம வீதிகள் அந்தக் கடையும் சேர நடுக்கடை பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே நாரண னாதரமே காரண மேபரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே