ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும் பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப் பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர் சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால் ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால் உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே
ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச் சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப் பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத் தாடிக் களிக்க அருள்