ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர் இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப் பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர் பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர் நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே