ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம் தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக் காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ