ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன் வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன் நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே