இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் இன்பமே என்னுடை அன்பே திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுறத் திகழ்கின்ற சிவமே மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல் வெளிஅர சாள்கின்ற பதியே பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே