இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம் இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான் மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய் குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- உண்மை கூறல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்