இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமிக வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக் கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன் அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே
இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன் அத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா
இத்தா ரணியில் என்பிழைகள் எல்லாம் பொறுத்த என்குருவே நித்தா சிற்றம் பலத்தாடும் நிருத்தா எல்லாஞ் செயவல்ல சித்தா சித்தி புரத்தமர்ந்த தேவே சித்த சிகாமணியே அத்தா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே