இனியநற் றாயின் இனியஎன் அரசே என்னிரு கண்ணினுண் மணியே கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே கனகஅம் பலத்துறும் களிப்பே துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும்கொண் டடியேன் தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான் தந்தநற் றந்தைநீ அலையோ