இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத் துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் நின்னருளே துணைஎன் றந்தோ என்பேதை மனமடங்கி இருப்பதன்றி எல்லாங்கண் டிருக்கும் என்றன் அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்