இன்று நின்றவர் நாளைநின் றிலரே என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச் சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் நன்று நின்துணை நாடக மலர்த்தாள் நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே
இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும் நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல் சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள் நித்தியம்பெற் றுய்யலாம் நீர்