இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத் தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும் அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- திருவருட் பெருமை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்