இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம் துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல் கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறும்ஆறே
இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன் புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனைஇஞ்ஞான்றே அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே