ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான் காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம் கண்டபரி சென்புகல்வேன் அண்டபகிர் அண்டம் தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான் மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும் வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே