உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன் முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார் சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றார் அகஞ்சேர் விழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன் முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார் சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ