உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல் உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம் மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத் தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே
உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை உண்ண வோஉண வுக்கும் வழியிலை படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான் எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக் கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான் விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன் வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே