உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் னவும்நாணம் உறுவ தெந்தாய் தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு பவஉருவாய் என்னுள் ஓங்கி அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே