உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் ஊரார் என்னை உடையவனார் மடுப்பார் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழைஉரைத்துக் கெடுப்பார் இல்லை என்சொலினும் கேளார் எனது கேள்வர்அவர் கொடுப்பார் என்றோ மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே