உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர் அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அனுபவ மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்