உணவை இழந்தும் தேவர்எலாம் உணரா ஒருவர் ஒற்றியில்என் கணவர் அடியேன் கண்அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே குணவர் எனினும் தாய்முதலோர் கூறா தெல்லாம் கூறுகின்றார் திணிகொள் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே