உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும் கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோ ய் தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால் தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே