உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால் கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- தற் சுதந்தரம் இன்மை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்