உண்டு வறிய ஒதிபோல உடம்மை வளர்த்தூன் ஊதியமே கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொயன்எனை விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக் கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே