உண்மையே அறிகிலா ஓதிய னேன்படும் எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ