உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் ஒருதிருப் பொதுஎன அறிந்தேன் செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன் மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப் பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப் பாடுகின் றேன்பொதுப் பாட்டே