உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே
உய்ய வல்லனேல் உன்திரு அருளாம் உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல் செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம் பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன் பொய்யி தல்லஎம் ஒற்றிஅம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே