உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே மையலற் றவர்தம் மனத்தொளில் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே