உருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக் கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே திருமணிப் பொதுவில் அன்புடை யவராச் செய்யவும் இச்சைகாண் எந்தாய்